Crime

சென்னை: சிறைத் தண்​டனை அனுப​வித்து வெளியே வந்த பின் மீண்​டும் போதைப் பொருள் கடத்​திய இளைஞர், பெண் கூட்டாளியுடன் கைது செய்​யப்​பட்​டார். சென்​னை​யில் போதைப் பொருள் கடத்​தலில் ஈடு​படு​பவர்​களை போலீ​ஸார் தொடர்ந்து கைது செய்து வரு​கின்​றனர். அதன் ஒரு பகு​தி​யாக நுங்​கம்​பாக்​கம் போலீ​ஸார் நேற்று முன்​தினம் நுங்​கம்​பாக்​கம், மகாலிங்​கபுரம், லட்​சுமணன் தெரு​வில் கண்​காணித்​தனர். அப்​போது அங்கு சந்​தேகப்​படும்​படி நின்​றிருந்த பெண் உள்​ளிட்ட 4 பேரிடம் விசாரித்தனர்.

அவர்​கள் முன்​னுக்​குப்​பின் முரணாக பதில் அளித்​த​தால் அவர்​களின் உடைமை​களை சோதித்​த​போது, அதில் மெத்​தம்​பெட்​டமைன், உயர் ரக கஞ்சா எண்​ணெய், போதை ஸ்டாம்ப்​கள், போதை மாத்​திரைகள் இருந்​தது தெரிய​வந்​தது. அவற்றை பறி​முதல் செய்த போலீ​ஸார் போதைப் பொருள் வைத்​திருந்த கேளம்​பாக்​கத்​தில் வசிக்​கும் ஆங்​கிலோ இந்​தி​ய​னான வாரன் கிரெய்க் கனி (29), அவரது கூட்​டாளி​யான சூளைமேடு தஹிரா நிஹால் (26), அசோக் நகர் லஷ்மி நரசிம்​ம​ராவ் (27), வடபழனி ராம் (28) ஆகிய 4 பேரை கைது செய்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8QdVgbM

Post a Comment

0 Comments