Crime

ராமேசுவரம்: இலங்​கை​யின் தெற்கு கடல் பரப்​பில் உள்ள இந்​தி​யப் பெருங்​கடலில் சில மூட்​டைகள் மிதந்து வரு​வதை இலங்கை கடற்​படை​யினர் கண்​டறிந்​தனர். இதையடுத்​து, 51 மூட்​டைகளை கடற்​படை​யினர் கைப்​பற்​றினர். அவற்றை தங்​காலை மீன்​பிடித் துறை​முகத்​துக்​கு கொண்டு சென்று ஆய்வு செய்​தனர்.

அந்த மூட்​டைகளில் 676 கிலோ மெத்​த​பெட்​டமைன், 156 கிலோ ஹெரா​யின், 12 கிலோ ஹாஷிஷ் என மொத்​தம் 844 கிலோ போதைப் பொருட்​கள் இருந்​தன. இவற்​றின் சர்​வ​தேச மதிப்பு கோடிக்​கணக்​கில் இருக்​கும். இந்​தப் போதை பொருட்​களை கடத்தியவர்கள் குறித்து இலங்கை கடற்​படை​யினர் விசா​ரித்து வரு​கின்​றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lxMhZB9

Post a Comment

0 Comments