Crime

சென்னை: ​போதைப் பொருள் வாங்கி பயன்​படுத்​திய விவ​காரத்​தில் நடிகர்​கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரை விசா​ரணைக்கு ஆஜராக அமலாக்​கத் துறை உத்​தர​விட்​டுள்​ளது. சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள தனி​யார் பாரில் கடந்தமே மாதம் இருதரப்​பினரிடையே ஏற்​பட்ட மோதல் தொடர்​பாக அஜய் வாண்​டை​யார், ரவுடி சுனாமி சேதுப​தி, அதி​முக நிர்​வாகி பிர​சாத், நாகேந்​திர சேதுபதி உள்​ளிட்​டோரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

பிர​சாத்​திடம் போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், சினிமா நடிகர்​களுக்கு போதைப் பொருள் விற்​பனை செய்து வந்​தது தெரிய​வந்​தது. இது போலீ​ஸாரிடையே அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. விசா​ரணை​யில் அவர் கொடுத்த தகவலின்​பேரில், சேலம் மாவட்​டம் சங்​ககிரியைச் சேர்ந்த பிரதீப்​கு​மார் (எ) பிரிட்​டோ), மேற்கு ஆப்​பரிக்​காவைச் சேர்ந்த ஜான் ஆகியோரை ஜூன் 17-ம் தேதி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீ​ஸார் கைது செய்​தனர். அவர்​களிடம் நடத்​திய விசா​ரணை​யில், நடிகர்​கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் போதைப் பொருட்​கள் வாங்கி பயன்​படுத்தி வந்​தது தெரிய​வந்​தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/G9mjNdZ

Post a Comment

0 Comments