Crime

ஓசூர்: ஓசூர் அருகே அடுத்​தடுத்து 6 வாக​னங்​கள் மோதிய விபத்​தில் கனடா​வில் இருந்து தலை தீபாவளி கொண்​டாட வந்​தவர் உள்ளிட்ட 4 நண்​பர்​கள் உயி​ரிழந்​தனர். கிருஷ்ணகிரி மாவட்​டம் ஓசூர் அடுத்த கோபசந்​திரம் அருகே​ நேற்று அதி​காலை 3.45 மணி அளவில் பெங்​களூரு​வில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற சரக்கு வாக​னம், 2 லாரி​கள், கார் என 4 வாக​னங்​கள் ஒன்​றன் பின் ஒன்​றாக மோதிக்கொண்​டன.

இதனால், இச்​சாலை​யில் வாகன போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்ட நிலை​யில், அங்கு நின்ற காரின் பின்​னால், வேக​மாக வந்த லாரி மோதி​யது. இதில் கார் அப்​பளம்​போல நொறுங்​கிய​தில், காரில் இருந்த 4 இளைஞர்​கள் உயி​ரிழந்​தனர். தகவல் அறிந்து அங்கு வந்த அட்கோ போலீ​ஸார், உயி​ரிழந்​தவர்​களின் உடல்​களை மீட்​டு, ஓசூர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iMdFEnP

Post a Comment

0 Comments