Crime

சென்னை: மத்​திய அரசு அதி​காரி தனது மகனை கொலை செய்​து​விட்​டு, ரயில் முன் பாய்ந்து தற்​கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் அவரது மனைவி கழுத்து அறு​பட்ட நிலை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். சென்னை அண்ணா நகர் மேற்கு 18-வது பிர​தான சாலை​யில் உள்ள அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பில் வசித்து வந்​தவர் நவீன் கண்​ணன் (43).

இவர் தேனாம்​பேட்​டை​யில் உள்ள மத்​திய பாது​காப்​புக்கணக்​கு​கள் அலு​வல​கத்​தில் சீனியர் ஆடிட்​ட​ராக பணி செய்து வந்​தார். தெற்கு ரயில்​வே​யில் அதி​காரி​யாக பணி செய்​யும் மனைவி நிவே​திதா (38), 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது மகன் லவின் கண்ணன் மற்​றும் பெற்​றோருடன் வசித்து வந்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jZsqfSv

Post a Comment

0 Comments