
திருவாரூர்: திருவாரூர் ஏ.டி.பன்னீர்செல்வம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சிதபாதம்(80). ஓய்வுபெற்ற அஞ்சல் நிலைய அதிகாரியான இவரிடம், இரு வாட்ஸ்அப் எண்களில் இருந்து கடந்த 19-ம் தேதி வீடியோ அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர்கள், “உங்கள் முகவரிக்கு சட்டவிரோதமான கடத்தல் பொருள் பார்சல் வந்துள்ளது. உங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். நீங்கள் பணம் அளிக்கவில்லை எனில், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்” என்று மிரட்டியுள்ளனர்.
இதனால் பதற்றமடைந்த குஞ்சிதபாதம், அந்த மர்ம நபர்கள் குறிப்பிட்ட 3 வங்கிக் கணக்குகளுக்கு 7 தவணைகளாக ரூ.13.50 லட்சத்தை அனுப்பியுள்ளார். பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த குஞ்சிதபாதம், திருவாரூர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1g38KXP
0 Comments