
கடலூர்: விருத்தாசலம் அருகே மரத்தில் கார் மோதியதில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள எருமனூர் முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு தெருக்கூத்து நடைபெற்றது.
இதைக் காண வந்த அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், நள்ளிரவு அதே பகுதியை சேர்ந்த ஆதினேஷ் (21), ஐயப்பன் (19), வேல்முருகன் (21), வெங்கடேசன் (25), அவரது தம்பி கவுதமன் (20), நடராஜன் (21) ஆகியோரை காரில் ஏற்றிக் கொண்டு, டீ குடிப்பதற்காக சித்தலூர் நோக்கிச் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NJA2LeO
0 Comments