
சென்னை: குழந்தை கீழே கிடந்ததாக போலீஸில் ஒப்படைத்து நாடகமாடிய இளைஞரும், மாணவியும் அக்குழந்தையை பெற்றுக் கொண்டு வளர்க்க சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தை தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கையில் கட்டைப்பையுடன் இளைஞர் ஒருவர் கடந்த சனிக்கிழமை வந்தார்.
அவர் கட்டைப்பையை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரிடம் கொடுத்து, ``நான் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது, சாலையோரம் கட்டைப்பையில் வைத்தவாறு இந்த குழந்தை கீழே கிடந்தது'' எனத் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார், அந்த இளைஞரிடம் குழந்தை எந்த இடத்தில் கிடந்தது? எப்போது பார்த்தீர்கள்? எனக் கேள்விகளை எழுப்ப, இளைஞர் முன்னுக்குப் பின் முரணான பதிலளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0zhMIZG
0 Comments