
தாம்பரம்: தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், காமராஜர் சாலையில் வசித்து வருபவர்கள் சுப்பிரமணியம், ரம்யா தம்பதியர். சுப்பிரமணியம் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், அவரது மனைவி ரம்யா ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு இவரது வீட்டின் அருகாமையில் உள்ள சிக்கன் கடைக்கு சுப்பிரமணியன் சிக்கன் வாங்க சென்ற போது, பாஜக பிரமுகர் பழனிவேல் என்பவர் அறிமுகம் ஆகி உள்ளார்.
அப்போது, தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், பாஜகவில் பீ்ர்க்கன்கரணை இரும்புலியூர் பகுதி பொறுப்பாளராக பதிவு வகித்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், சுப்பிரமணியம் மீண்டும் 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிநாட்டுக்குச் சென்றார். அப்போது, சுப்பிரமணியை தொலை பேசியில் தொடர்பு கொண்ட பாஜக பிரமுகர் பழனிவேல் தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என கூறி, ரூ.20 லட்சம் பணத்தை வங்கி கணக்கில் வாங்கி உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6SuMV9a
0 Comments