Crime

புதுச்சேரி: புதுச்சேரி காராமணிக்குப்பம் மாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் காந்தி மகள் சங்கரபிரியா (எ) சான் ரேச்சல் (26). மாடல் அழகியான இவர் மிஸ் புதுச்சேரி 2020, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019, மிஸ் டார்க் குயின் தமிழகம் 2019, குயின் ஆப் மெட்ராஸ் 2022, மிஸ் ஆப்பிரிக்கா கோல்டன் இந்தியா 2023 என பல பட்டங்களையும் கருப்பழகி பிரிவில் உலக அழகி பட்டத்தையும் வென்றவர்.

இவர் அண்மையில் புதுச்சேரி 100 அடி சாலை ஜான்சி நகரைச் சேர்ந்த சத்யா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. கடந்த ஜூன் 6-ம் தேதி இரவு சான் ரேச்சல், அளவுக்கு அதிகமாக தூக்க மத்திரை மற்றும் ரத்த அழுத்த மாத்திரைகளை உட் கொண்டு விட்டதாக தனது தந்தை காந்திக்கு தகவல் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0gLZVD8

Post a Comment

0 Comments