Crime

சென்னை: குரோம்​பேட்​டை, ஆதம் நகரைச் சேர்ந்​தவர் பரந்​தாமன் (43). இவர் நேற்று முன்​தினம் பிற்​பகல் வடபழனி ஆற்​காடு சாலை​யில் உள்ள மது​பானக் கடை அருகே மது அருந்​திக்​கொண்​டிருந்​தார். அப்​போது, அங்கு கோடம்​பாக்​கம் வசந்​த​ராஜ் (39), சாந்​தகு​மார் (37), சாலிகி​ராமம் விக்​னேஸ்​வரன் (28) ஆகிய 3 பேர் வந்​தனர்.

வந்​தவர்​கள் பரந்​தாமன் வைத்​திருந்த மது​பானத்தை கேட்​காமல் எடுத்து குடித்​த​தாக கூறப்​படு​கிறது. இதனால், பரந்​தாமனுக்​கும், 3 பேருக்​கும் இடையே வாய்த்​தக​ராறு ஏற்​பட்​டது. ஆத்​திரமடைந்த மூவரும் பரந்​தாமனை கையாலும், ஸ்பேன​ராலும் சரமாரி​யாக தாக்​கி​விட்டு தப்​பினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ogYDBKx

Post a Comment

0 Comments