Crime

தஞ்சாவூர்: தஞ்​சாவூர் மாவட்​டம் ஒரத்​த​நாடு - வல்​லம் சாலை​யில் நேற்று போலீஸார் வாகன சோதனை​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்போது, சென்​னை​யில் இருந்து வந்த ஒரு ஆம்னி பேருந்​தில் சோதனை​யிட்​ட​போது, அதிலிருந்த இரு​வரிடம் அதிக பணம் இருந்தது தெரிய​வந்​தது.

விசா​ரணை​யில், அவர்​கள் சென்னை ராயபுரத்​தைச் சேர்ந்த சையத் அலா​வுதீன்​(46), பாரீஸ் பகு​தி​யைச் சேர்ந்த ஜாபர் அலி(51) என்பதும், வெளி​நாடு​களில் இருந்து வரும் ஹவாலா பணத்தை விநியோகம் செய்​வதை வழக்​க​மாக கொண்​டுள்ளதும் தெரியவந்தது. அவர்​களிடமிருந்து ரூ.33.04 லட்​சத்தை போலீ​ஸார் பறிமுதல் செய்தனர். தகவலறிந்து வந்த திருச்சி வரு​மான வரித்துறை அதி​காரி​கள், விசாரணைக்காக சையத் அலா​வுதீன், ஜாபர் அலி ஆகியோரை திருச்​சிக்கு அழைத்​துச் சென்​றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pU6yQvc

Post a Comment

0 Comments