Crime

ராமேசுவரம்: இந்​தி​யப் பெருங்​கடலில் 2 ஆழ்​கடல் மீன்​பிடி படகு​களில் கடத்​தப்​பட்ட 600 கிலோ ஐஸ் போதைப்​பொருட்​களை இலங்கை கடற்​படை​யினர் பறி​முதல் செய்து அந்​நாட்டைச் சேர்ந்த 11 பேரை கைது செய்​துள்​ளனர். செயற்​கைக்​கோள் தொழில்​நுட்​பத்தைப் பயன்​படுத்தி, சர்​வ​தேச கடற்​பகு​தி​யில் போதைப் பொருட்​களை ஏற்​றிச் செல்​லும் படகு​கள் மற்​றும் கப்​பல்​கள் பற்​றிய தேடு​தல் நடவடிக்​கைகளை இலங்கை கடற்​படை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

மீன்பிடி படகுகள் சுற்றிவளைப்பு: இந்நிலையில், நேற்று முன்​தினம் (புதன்​) இலங்​கை​யின் தெற்கு பகு​தி​யிலுள்ள திக்​கோ​விட்​ட​வில் இருந்து 100 கடல் மைல் தொலை​வில் இந்​தி​யப் பெருங்​கடலில் சந்​தேகத்​துக்​குரிய முறை​யில் பயணித்த 2 ஆழ்​கடல் மீன்​பிடி படகுகளை இலங்கை கடற்​படை​யினர் கண்​டறிந்து ரோந்து கப்​பலில் சென்று சுற்றி வளைத்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/I2EoOv8

Post a Comment

0 Comments