Crime

சேலம்: சேலம் அருகே காடையாம்பட்டியில் மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து தப்பியவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். கொலையாளி தாக்கியதில் எஸ்ஐ, காவலர் ஆகியோர் காயமடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டிக்கு உட்பட்ட குட்டப்பட்டி உப்பள்ளத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜனகராஜ். இவரது மனைவி சரஸ்வதி (60). இவர்களது மகன்கள் ராஜா, முருகன். திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். தோட்ட வீட்டில் வசித்து வந்த சரஸ்வதி கடந்த 20-ம் தேதி மாடுகளை மேய்ச்சலுக்காக காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அருகில் இருந்தவர்கள் சரஸ்வதியை தேடியபோது, வனத்தையொட்டிய பகுதியில் காது, மூக்கு அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IR57pi6

Post a Comment

0 Comments