Crime

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசூர் கூட்டுச் சாலையில் ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற அமைச்சர் பொன்முடி, அப்போதையை ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் மீது சேற்றை வீசியவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2024 நவம்பர் 31-ம் தேதி ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த போது விழுப்புரத்தில் வரலாறு காணாத மழை பெய்ததில் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கின. இதில் ஏராளமான பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பாக அரசூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ளத்தில் வீடுகள் மூழ்கி 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/X2shMmN

Post a Comment

0 Comments