Crime

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை அருகே கடலில் கவிழந்த நிலையில், மிதந்த இலங்கையை சேர்ந்த படகை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது தொடர்பாக கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியதாழை மீனவ கிராமத்தில் தினமும் 400-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். அதுபோல இன்று (மார்ச் 7) காலையில் சில படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தன. அப்போது, பெரியதாழையில் இருந்து சுமார் 7 கடல்மைல் தொலைவில் ஒரு பைபர் படகு தலைகுப்புற கவிழ்ந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oRrk4LO

Post a Comment

0 Comments