
கிருஷ்ணகிரியில் சாலையில் நடந்து சென்ற தனியார் பள்ளி ஆசிரியரைத் தாக்கி செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துச் சென்ற 3 சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் டேவிட் ராஜன் (57). தனியார் பள்ளி ஆசிரியரான இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனது நண்பர் வீட்டுக்குக் கடந்த 18-ம் தேதி வந்தார். நண்பரைப் பார்த்துவிட்டு, நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் காஞ்சிபுரம் செல்ல கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்துக்கு, பெங்களூரு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த 3 சிறுவர்கள் டேவிட் ராஜனை வழிமறித்து கல்லால் தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cYP5kJd
0 Comments