Crime

சென்னை: 500 சதவீதம் லாபம் பெற்றுத் தருவதாக கூறி, தொழிலதிபரிடம் ரூ.14 கோடி நூதன முறையில் மோசடி செய்யப்பட்டது. இதில், தொடர்புடைய 6 பேர் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவர், தமிழக காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவில் அண்மையில் புகார் ஒன்று அளித்திருந்தார்.

அதில், “கடந்த ஏப்ரல் மாதம் வாட்ஸ்அப் மூலம் ஒரு நபர் தொடர்பு கொண்டு பேசினார். அந்த நபர், ‘பிளக் ராக் அஸட் மேனேஜ்மென்ட் பிஸினெஸ் ஸ்கூல்’ என்ற பெயரில் ஒரு நிறுவனம் நடத்தி வருவதாகவும், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 2 மாதத்தில் 500 சதவீதம் லாபம் கிடைக்கும் எனவும், தங்களது நிறுவனத்துக்கு செபி அனுமதி இருப்பதாகவும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wSXKNEk

Post a Comment

0 Comments