Crime

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசுப் பேருந்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நபரின் சடலத்தோடு அவருடன் பயணித்த இருவரையும் நடுவழியில் இரவில் இறக்கிவிட்ட தற்காலிக ஓட்டுநரை பணி நீக்கமும், நடத்துநரை பணியிடை நீக்கமும் செய்து விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பீமாமண்டாவி (60), அசோக்குமார் ஓயான் (19) கஜுனுகொடோபி (20) ஆகிய மூன்று பேரும் விக்கிரவாண்டியில் செயல்படும் தனியார் தீவன கம்பெணியில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு அரசுப் பேருந்தில் மூவரும் சென்றுள்ளனர். அப்போது செங்கல்பட்டு அருகே சென்றபோது பீமாமண்டாவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு பேருந்திலேயே இறந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bvWTQAx

Post a Comment

0 Comments