Crime

சின்னமனூர்: வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடிய சின்னமனூர் நகர அதிமுக செயலாளரை போலீஸார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர் பிச்சைக்கனி (38). அதிமுக நகரச் செயலாளரான இவரது வீடு மற்றும் கட்சி அலுவலகம் உத்தமபாளையம் சாலையில் உள்ளது. கடந்த 24-ம் தேதி தனது வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக பிச்சைக்கனி போலீஸில் புகார் கொடுத்தார்.

அதில், தனக்கும் சின்னமனூர் 13-வது வார்டு அதிமுக உறுப்பினர் உமாராணி மற்றும் அவரது மகன் வெங்கடேசனுக்கும் இடையே முன்விரோதம் உள்ளதாகவும், அவர்கள்தான் பெட்ரோல் குண்டுவீசியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
வீட்டில் இருந்த 6 கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்ததில், இருசக்கர வாகனத்தில் இருவரும், ஆட்டோவில் சிலரும்பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியது தெரிய வந்தது. இவர்கள் பிச்சைக்கனி தரப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் உறுதியானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mWJ7tZH

Post a Comment

0 Comments