
சென்னை: நாடு முழுவதும், ஒரே நாளில் 30 வணிக வளாகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் புரளியை கிளப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையம், தனியார் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்போன், கடிதம், இ-மெயில் மூலமாக கடந்த 6 மாதங்களாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பீதியை ஏற்படுத்தி வருகின்றனர். சில நேரங்களில் தனிநபர் பெயரிலும், காவல்துறை உயர் அதிகாரிகள் பெயரில் போலியான இணையதள முகவரியை உருவாக்கி் அதன் மூலம் மின்னஞ்சல் அனுப்பியும் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xQZCdLO
0 Comments