Crime

நாமக்கல்: கொல்லிமலையில் உள்ள தனியார் ஹோட்டலில் மர்மமான முறையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்யாணி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி நாமக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவ - மாணவியரை கொல்லிமலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு பயிற்சிக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pFK85uM

Post a Comment

0 Comments