Crime

ராமநாதபுரம்: மத வெறுப்பு உணர்வைத் தூண்டும் வகையில், சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்ட பாஜக பிரமுகரை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்தவர் கதிரவன் (35). பாஜக ஒன்றியத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். இவர் மத வெறுப்பு உணர்வைத் தூண்டும் வகையிலும், இந்து, முஸ்லிம்களுக்கு இடையே மத மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் கடந்த 3-ம் தேதி சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டதாக, தமுமுக மாவட்டச் செயலாளர் அப்துல் ரகுமான், மண்டபம் போலீஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில், போலீஸார் வழக்கு பதிவு செய்து, கதிரவனை நேற்று கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GRMnS65

Post a Comment

0 Comments