
புதுடெல்லி: இலங்கையில் இருந்து சென்னை வழியாக அகமதாபாத் விமான நிலையம் வந்த 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், முகமது நுஸ்ரத் என்பவர் சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்து எலக்ட்ரிக் பொருட்களை இறக்குமதி செய்து விற்பவர் என தெரிய வந்தது. முகமது நஃப்ரான் என்பவர் வெளிநாட்டு ஜவுளி விற்பனையில் ஈடுபட்டுள்ளார். முகமது ஃபாரிஸ், முகமது ரஸ்தீன் ஆகியோர் முதல் முறை இந்தியா வந்ததும் தெரியவந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ArZNIeu
0 Comments