
கிருஷ்ணகிரி: போக்சோ வழக்கு தொடர்பாக டெல்லியில் கைதான கேரள மாநிலஇளைஞரை ஆம்னி பேருந்தில்கேரளாவுக்கு அழைத்துச் சென்றபோது, வழியில் கிருஷ்ணகிரி அருகே தப்பியோடினார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீ ஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது: கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் வடசேரிக்காரா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் சச்சின் ரவி(28).புகாரின் பேரில் இவர் மீது கடந்த2023-ம் ஆண்டு போக்சோ மற்றும்தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பத்தனம்திட்டா சைபர் க்ரைம் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5orsnEd
0 Comments