Crime

ஓசூர்: தேன்கனிக்கோட்டையை அடுத்த நொகனூர் காப்புகாட்டில் தீ வைத்தவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில் தற்போது கோடைக்கு முன்னரே கடும் வறட்சி நிலவி வருவதால், மரங்கள், இலைகள் காய்ந்து சருகாகி உள்ளது. இதனால் வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்படாமல் இருக்க வனத்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்து பல்வேறு நடவடிக்கை எடுத்து, கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் தேன்கனிக்கோட்டையை அடுத்த இருதுகோட்டை ஊராட்சி ஆலஹள்ளி கிராமத்தை சேர்ந்த முனிராஜ் (50) என்பவர் நொகனூர் காப்பு காட்டில் கால்நடை மேய்சலுக்காக சென்ற போது, அங்கு செடிகளுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iQdagcD

Post a Comment

0 Comments