
பஹதூர்கர்: இந்திய தேசிய லோக் தள கட்சியின் ஹரியாணா மாநிலத் தலைவர் நஃபே சிங் ரதி துப்பாக்கியால் சுட்டுக் கொலை. இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் உள்ள பஹதூர்கர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் அபய் சௌதாலா உறுதி செய்துள்ளார்.
நஃபே சிங் ரதி, காரில் பயணித்த போது மற்றொரு காரில் வந்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் அவர் உயிரிழந்துள்ளார். அதோடு காரில் இருந்தவர்களும் காயமடைந்துள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நஃபே சிங் ரதி, மீது பல குண்டுகள் பாய்ந்து இருந்ததாகவும், அவர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக பிரம்மசக்தி சஞ்சீவனி மருத்துவமனையின் மருத்துவர் மணீஷ் சர்மா தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UgnK8pf
0 Comments