Crime

உதகை: கூடலூரை அடுத்துள்ள பகுதியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் சலாம் ( 65 ). இவர், அப்பகுதியில் ஜீப் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். பொங்கல் பண்டிகையையொட்டி, அப்பகுதியில் கபடி போட்டிகள் நடைபெற்றன. இதை பார்ப்பதற்காக, அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சென்றனர். அப்போது, 7 வயது சிறுவனுக்கு அப்துல் சலாம் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டல் விடுத்தார். ஆனால், பெற்றோரிடம் சிறுவன் கூறியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qRZr0D

Post a Comment

0 Comments