Crime

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு அருகேயுள்ள நாலுவேதபதி கவுண்டர் தெருவைச் சேர்ந்த மகேந்திரன் (32). இவரது வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸார் நேற்று அவரது வீட்டில் சோதனையிட்டு, பதுக்கி வைத்திருந்த 364 கிலோ கஞ்சாவையும் , அவற்றை இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக வைத்திருந்த ஃபைபர் படகையும் பறிமுதல் செய்தனர். மேலும், மகேந்திரன் மற்றும் அவரது கூட்டாளிகளான நாகைஅக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சத்தியசீலன்(37), புஷ்பவனம் மீனவர் காலனியைச் சேர்ந்த சுகுமார்(29) ஆகியோரைக் கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xL91V4n

Post a Comment

0 Comments