Crime

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 2 பேர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள பல்லவர்மேடு என்ற பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி பிரபாகரன். இவர் மீது கொலை வழக்கு, கொலை முயற்சி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் உள்ளன. தேமுதிக நிர்வாகி சரவணன் கொலை வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் வெளிவந்த அவரை நேற்று (டிச.27) மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் ஓடஓட வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RAn9aw1

Post a Comment

0 Comments