
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் சுஜாதா தலைமையிலான போலீஸார், பொள்ளாச்சி-உடுமலை சாலை மரப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு சந்தேப்படும்படி நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சர்வேஸ்வர சாகு (39) என்பதும், கடந்த 5 ஆண்டுகளாக கோவையில் பானிபூரி கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும், அவர் கடந்த சில தினங்களாக ஒடிசாவில் இருந்து போதை சாக்லெட் கடத்தி வந்து, பொள்ளாச்சியில் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0HOUiPz
0 Comments