
பெங்களூரு: கர்நாடக மாநில மைசூரு-குடகு மக்களவை தொகுதி பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவின் சகோதரர் விக்ரம் சிம்ஹா பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மாநில வனத்துறையினர் கைது செய்துள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான மரங்களை வெட்டி, கடத்தியது அவர் மீதான குற்றச்சாட்டு.
அந்த மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள நந்தகொண்டனஹல்லி கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதனை அந்த கிராமத்தில் கள ஆய்வு செய்த தாசில்தார் அடையாளம் கண்டார். தொடர்ந்து இந்த விவரத்தை வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 126 மரங்களை அவர் வெட்டியதாக அம்மாநில வனத்துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OkwdYjq
0 Comments