Crime

திருச்சி: திருச்சியில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ஜெகன் என்ற கொம்பன் ஜெகனை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த என்கவுன்ட்டர் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் விளக்கம் அளித்தார். அவர் அளித்த விளக்கத்தில், "சிறுகனூர் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட சாணமங்கலம் மலைப்பகுதியை சுற்றி கடந்த சில நாட்களாகவே, அரிவாள் மற்றும் துப்பாக்கி முனையில் வழிப்பறி சம்பவங்கள் நடப்பதாக புகார்கள் வந்தன. காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் தனிப்படை அமைத்து தீபாவளி சமயத்தில் சமூக விரோதிகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்க அனுப்பி வைத்திருந்தோம். அந்த தனிப்படைக்கு சாணமங்கலம் பகுதியில் வழிப்பறி மற்றும் ஆடுகள் கடத்தப்படுவது குறித்து தகவல் வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2PkQWsi

Post a Comment

0 Comments