
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கார் ஒன்று சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதியதில் காரில் இருந்தவர்களில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சத்தியமங்கலத்தில் வேடச்சின்னனூர் கிராமத்தில் இன்று அதிகாலை இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்து குறித்து போலீஸார் தரப்பில், "பங்களா புதூர் பகுதியைச் சேர்ந்த 5 பேர் ஒரு காரில் ஏலூரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்தக் கார் சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது மோதியுள்ளது. இதில் கீர்த்திவேல்துரை (28), பூவரசன் (24), ராகவன் (26), மயிலாண்டான் (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துப் பகுதியிலிருந்து சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NijaWxT
0 Comments