
சேலையூர்: புதிய பெருங்களத்தூர், விவேக் நகரை சேர்ந்தவர் பரத்குமார் (34). சோமோட்டோ உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தாம்பரம் – வேளச்சேரி சாலை, செம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பரத்குமாரின் மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பினர். இதை சற்றும் எதிர்பார்க்காத பரத்குமார் சுதாரித்துக் கொண்டு மர்ம நபர்களை விரட்டி சென்றார். பள்ளிக்கரணை மேம்பாலத்தின் மீது சென்ற போது மர்ம நபர்கள் சென்ற இருசக்கர வாகனம் பாலத்தின் மீது நடந்து சென்ற இருவர் மீது பயங்கரமாக மோதி கீழே விழுந்தனர்.
இதனிடையே தகவலறிந்த பள்ளிக்கரணை போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி பிடித்தனர். வாகனம் மோதி காயமடைந்த இருவரை, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சேலையூர், பராசக்தி நகரை சேர்ந்த தமீம் அன்சாரி (21), அஸ்தினாபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இருவரும், இன்ஸ்டாகிராம் மூலம் ஆறுமாதங்களுக்கு முன் நண்பர்களாகியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Uv5Gsqg
0 Comments