Crime

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. வெளியூரை சேர்ந்த தொழிலாளர்கள் அங்கு தங்கி,வேலை பார்த்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை சேர்ந்த குட்டி என்ற ராஜேந்திரன் (33), செஞ்சியைசேர்ந்த அவரது உறவினர் சுகுமார்(38) ஆகியோரும் கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்கள் 2 பேரும் கடந்த 22-ம்தேதி இரவு கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பி்ன்னர் 2பேருக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது ராஜேந்திரனைசுகுமார் உருட்டுக்கட்டையால் பலமாக தாக்கி யதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன், சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார். இதையடுத்து, சுகுமார் அங்கிருந்து தப்பியோடினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/v3S7LIU

Post a Comment

0 Comments