
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.14 கோடி மதிப்புள்ள 13 கிலோதங்கம், 120 ஐபோன்கள், லேப்டாப்,வெளிநாட்டு சிகரெட், குங்குமப்பூஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்டதாக 113 பயணிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. இந்த விமானத்தில் பயணிகள் தங்கம், ஐபோன், லேப்டாப், வெளிநாட்டு சிகரெட் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததால், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். விமானத்தில் வந்த 186 பயணிகளையும் நிறுத்தி பல மணி நேரமாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடத்தலில் தொடர்பு இல்லாத 73 பேரை வெளியே செல்ல அனுமதித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Db9oSZl
0 Comments