Crime

மதுரை: மதுரை திமுக முன்னாள் மண்டலத் தலைவர் விகே. குருசாமி மீது 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெங்களூரூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்தவர்கள் விகே. குருசாமி (திமுக), ராஜபாண்டி (அதிமுக) இருவரும் மாநகராட்சி மண்டலத் தலைவராக இருந்தவர்கள். கடந்த 20 ஆண்டுக்கு முன்பு இருந்தே இவர்களுக்குள் அரசியல் ரீதியாக முன்விரோதம் இருந்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து இருதரப்பிலும் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் மாறி, மாறி மோதிக்கொண்டனர். அடுத்தடுத்து கொலைச் சம்பவங்களும் அரங்கேறின. விகே.குருசாமி தரப்பில் அவரது சொந்த மருமகன் வழக்கறிஞர் பாண்டியன் உட்பட 10க்கும் மேற்பட்டோரும், ராஜபாண்டி தரப்பில் அவரது மகன் உட்பட சிலரும் தொடர்ந்து கொல்லப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VXjYJ3e

Post a Comment

0 Comments