Crime

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் அருகே உள்ள புதுக்குடியைசேர்ந்தவர் செந்தில்நாதன் (43). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு மூன்று மகன்கள். செந்தில்நாதன் ஸ்ரீவைகுண்டம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே முறுக்கு கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை முறுக்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த அவரை, 3 பேர் கடைக்குள் புகுந்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர்.

ஸ்ரீவைகுண்டம் போலீஸார் அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கொலை சம்பவத்தில் 3 சிறுவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. பிளஸ் 1 மாணவர்களான 2 சிறுவர்களை நேற்று போலீஸார் கைது செய்தனர். மற்றொரு சிறுவர் மற்றும் அவர்களை தூண்டிவிட்ட ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uUaiHJe

Post a Comment

0 Comments