
திருப்பூர்: பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் பாலமுருகன் (51). இவர், அதே கல்லூரியில் படித்து வரும் மாணவிக்கு, கடந்த மாதம் 14-ம் தேதி பாலியல் தொல்லை அளித்தார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, பெண்கள் பாதுகாப்பு எண் 181-ல் புகார் அளித்தார். இதையடுத்து பல்லடம் அனைத்து மகளிர் போலீஸார் விசாரித்து, பாலமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nQ3okHD
0 Comments