
சென்னை: சென்னை முகப்பேரில் பிரபலமான தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அங்கு அண்ணா நகரை சேர்ந்த6 வயது சிறுமி படித்து வருகிறார்.அதே பள்ளியில் அண்ணாநகர் கிழக்கு ஆர்.வி.நகரை சேர்ந்த வேணுகோபால் (41) என்பவர் 5 ஆண்டுகளாக நடன ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், சிறுமியிடம் வேணுகோபால் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பள்ளி நிர்வாகத்திடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். ஆனால், ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கு சென்று நடன ஆசிரியரை மடக்கி சரமாரியாக தாக்கியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kACnopd
0 Comments