Crime

புதுடெல்லி: தனது நண்பரின் 16 வயது மகளை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய, டெல்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையைச் சேர்ந்த அரசு அதிகாரியை அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்டச் சிறுமி டெல்லியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2000 ஆம் ஆண்டு சிறுமியின் தந்தை இறந்ததைத் தொடர்ந்து, அச்சிறுமி பிரேமோதய் ஹாக்கா என்பவரின் இல்லத்தில் வசித்து வந்திருக்கிறார். அவர் டெல்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறையில் இணை இயக்குநராக பணியற்றியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NFuAm2P

Post a Comment

0 Comments