Crime

மதுரை: ரூ.73.50 லட்சம் ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக ‘ நியோ மேக்ஸ்’ நிறுவன இயக்குநர்கள், முகவர்கள் வீடுகள், அலுவலகங்களில் பொருளாதார குற்றத்தடுப்பு போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தென்மாவட்டத்தில் விருதுநகரை மையமாக கொண்டு ரியல் எஸ்டேட் உட்பட தொழில்களை செய்யும் தனியார் நிறுவனமான ‘நியோ மேக்ஸ்’ பொது மக்களிடம் முதலீடுகளை பெற்றன. இதன்மூலம் கிடைக்கும் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் தருவதாக கூறி முதலீடுகளை ஈர்த்துள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயசங்கரீஸ்வரன். தற்போது சென்னையில் வசிக்கிறார். சில மாதத்துக்கு முன்பு ‘நியோ மேக்ஸ்’ மற்றும் அதன் துணை நிறுவனங்களின் முகவர்கள் செல்லம்மாள், நாராயணசாமி, மணிவண்ணன் ஆகியோர் அவரை அணுகினர். முதலீடு தொடர்பாக பேசி, அவரை மதுரை எஸ்எஸ். காலனியிலுள்ள அந்த நிறுவன அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்த நிறுவன இயக்குநர்கள் கமலக்கண்ணன், சுப்பிரமணியன், வீரசக்தி ஆகியோர் முதலீடு குறித்து ஜெயசங்கரீஸ்வரனிடம் பேசியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/N10MT2f

Post a Comment

0 Comments