Crime

திருச்சி: திருச்சி - சென்னை ரயில் வழித்தடத்தில் வாளாடி அருகே கடந்த 2-ம் தேதி இரவு தண்டவாளத்தில் 2 கனரக வாகன டயர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது, அந்த வழியாகச் சென்ற கன்னியாகுமரி விரைவு ரயில் டயர்கள் மீது மோதியதில், இன்ஜினின் அடிப்பகுதியில் ஒரு டயர் சிக்கி, 4 பெட்டிகளில் மின் தடை ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே டிஎஸ்பி பிரபாகர், லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் ஆகியோர் தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yJRf0FD

Post a Comment

0 Comments