Crime

ராமேசுவரம்: இலங்கை கல்பிட்டி பகுதியிலிருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அந்நாட்டு போலீஸார் நேற்று முன்தினம் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பேருந்தை சோதனையிட்டதில் பையில் 3 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருள் இருந்தது தெரிந்தது.

கடத்தி வந்த நபரைப் பிடித்து விசாரித்ததில் போதைப் பொருள் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டதாகவும், இதில் தொடர்புடைய 6 பேர் காரில் பேருந்துக்கு பின்னால் வந்து கொண்டிருப்பதாகவும் அந்த நபர் கூறினார். இதையடுத்து காரில் வந்த 6 பேர், தலைமன்னாரில் ஒருவர் உட்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/feTwVJ0

Post a Comment

0 Comments