Crime

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் 500 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸார், 3 பேரை கைது செய்துள்ளனர்.

நத்தத்துக்கு காரில் குட்கா கடத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நத்தம் காவல் நிலையஆய்வாளர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீஸார், நத்தம்-அய்யாப்பட்டி சாலையில் உள்ள தேங்காய் கிட்டங்கியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்த சொகுசு காரில் விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RIC3DYU

Post a Comment

0 Comments