Crime

கோவை: கோவை மாநகர காவல்துறையில், காவலர்களின் பயன்பாட்டுக்காக ‘ஆக்டோபஸ்’ என்ற பெயரிலான பிரத்யேக மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான இலச்சினையை டிஜிபி சி.சைலேந்திரபாபு வெளியிட்டார்.

கோவை மாநகர காவல்துறை யில் நுண்ணறிவுப் பிரிவு (ஐ.எஸ்), சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு (எஸ்.ஐ.சி) ஆகிய உளவுப் பிரிவுகள் உள்ளன. இப்பிரிவுகளின் சார்பில், மாநகரில் உள்ள காவல் நிலையங்கள் வாரியாக காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம், சட்டம் ஒழுங்கு பாதிப்பு சம்பவங்கள் தொடர்பாக களத்துக்குச் சென்று தகவல்களை சேகரித்து தங்களது உயரதிகாரிகள் மூலம் மாநகர காவல் ஆணையரின் கவனத்துக்கு கொண்டு சென்று வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vD6Xjxq

Post a Comment

0 Comments