Crime

உடுமலை: உடுமலை அரசு மருத்துவமனை முன் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்தது. உடுமலை அருகே கோட்டமங்கலத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நேற்று இரவு சிகிச்சைக்காக உடுமலை அரசுமருத்துவமனைக்கு காரில் வந்துள்ளார்.

காரை மருத்துவமனை முன் நிறுத்திச் சென்றார். சில மணி நேரங்களில் காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. அப்போது காற்று பலமாக வீசியதால் கார் தீப்பிடித்தது. இதனை கண்ட மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பு கருதி, காரின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UQ7E8wh

Post a Comment

0 Comments