
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுமியின்‌ குடும்பத்தாரிடம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
கடலூர் மாவட்டம், விருத்தாச லத்தில் கடந்த மாதம் 6 வயது சிறுமி பள்ளி தாளாளரால் பாலியல் துன்புறுதலுக்கு ஆளாக் கப்பட்ட சம்பவத்தில், பள்ளியின் தாளாளரும் விருத்தாசலம் நகர்மன்ற 30-வது வார்டு கவுன்சில ருமான பக்கிரிசாமி என்பவரை விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RT1IABd
0 Comments