
சென்னை: பிரிட்டன் விசாவை போலியாக தயாரித்து கொடுத்து ரூ.45 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வடபழனி அழகிரி நகரை சேர்ந்தவர் முகமது லியாஸ் (43). வடபழனி பகுதியில் டிராவல்ஸ் ஏஜென்ஸி நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு, நண்பர்கள் மூலம் அறிமுகமான திருவாரூர் மாவட்டத்தில் டிராவல்ஸ் ஏஜென்ஸிநடத்தி வரும் முகமது தாரிக், அவரது கூட்டாளிகளிடம், தனது வாடிக்கையாளர்கள் 20 பேருக்கு பிரிட்டன் விசா கேட்டு முன்பணம் கொடுத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7A6poMZ
0 Comments